Operation Sindhoor | India Pakistan War | பாக்., பிரதமரே வாய்திறந்தார் - இந்தியாவே எதிர்பாராத பதில்
இந்தியா, பாக். போரை நிறுத்தினார் டிரம்ப்- பாக். பிரதமர்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சமரச முயற்சியால், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் முடிவுக்கு வந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை தாம் முடிவுக்கு கொண்டு வந்ததாக டிரம்ப் பல்வேறு தருணங்களில் கூறி வரும் நிலையில், அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்நிலையில் எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி ஒப்பந்த மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் முடிவுக்கு வர டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார் என்றும், அதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர தாம் பரிந்துரை செய்ததாகவும் கூறினார். இதேபோல், காசா போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என மீண்டும் தாம் பரிந்துரைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.