#PanamaCanal | #Tunnel Panama Canal Metro | 4.5 கி.மீ பிரமாண்ட சுரங்கப் பாதை திறப்பு பனாமா கால்வாய் அடியில் 3-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தையொட்டி பிரமாண்ட சுரங்கப் பாதை திறக்கப்பட்டுள்ளது. பனாமாவின் அல்ப்ரூக் ரயில் நிலையத்திலிருந்து மேற்கு பிராந்தியத்தை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பனாமா கால்வாயின் அடிப்பகுதியில் நான்கரை கிலோமீட்டர் தூரத்துக்கு ராட்சத ட்ரில்லிங் இயந்திரத்துடன் பிரமாண்ட சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. அதைத் திறந்துவைத்த பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் மலினோ, மெட்ரோ திட்டம் 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக கூறினார்.