உலகம்

``அணுஆயுதங்களை எடுக்கும் வடகொரியா’’ - ஈரான் போர் நடுவே திகில் பிரகடனம்

தந்தி டிவி

எதிரி நாடுகள் வடகொரியாவின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார். தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் வட கொரிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாக மிரட்டியதை கிம் கடுமையாக விமர்சித்தார்... பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதியை யார் அழிக்கிறார்கள் என்பதை இந்தக் கருத்து காட்டுகிறது என விளக்கினார். மேலும் எதிரி வடகொரியாவுக்கு எதிராக ஆயுதபலத்தைப் பயன்படுத்தி இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் நாங்கள் அணு ஆயுதங்கள் உட்பட தங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் தயக்கமின்றி பயன்படுத்துவோம் என உறுதிபட தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்