நோபல் பரிசு வெற்றியாளர்களின் சாதனைகளை போற்றும் விதமாக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், நோபல் வார ஒளித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. ஸ்வீடன் நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒளி ஓவியங்களை ஆயிரக் கணக்கானோர் கண்டு ரசித்து வருகின்றனர். வெற்றியாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கும் விழா, வரும் புதன்கிழமை நடைபெற உள்ளவது.