New America | Trump | 'நியூ அமெரிக்கா' | டிரம்ப் சொன்ன புது ஐடியா
'நியூ மெக்சிகோ' மாநிலத்தின் பெயரை மாற்ற டிரம்ப் யோசனை அமெரிக்காவின் 'நியூ மெக்சிகோ' மாநிலத்தின் பெயரை 'நியூ அமெரிக்கா' என மாற்றலாம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்பிற்கு பதிலடி கொடுத்துள்ள நியூ மெக்சிகோ மாகாண ஆளுநர் மிஷெல், அமெரிக்கா உருவாவதற்கு முன்பிருந்தே இந்த பெயர் தங்களுக்குச் சொந்தமானது என்றும், எரிபொருள் விலை உயர்வு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பவே டிரம்ப் இவ்வாறு பேசுவதாகவும் சாடியுள்ளார்.