காசாவில் ஹமாஸ் அமைப்பின் அரசு பிரிவு தலைவர் ராவ்ஹி முஸ்தாஹா கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. காசாவில் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், வடக்கு காசாவில் பாதுகாப்பு நிறைந்த பாதாள சுரங்கத்தில் 3 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ராவ்ஹி முஸ்தாஹா மற்றும் ஹமாஸ் அமைப்பின் இரண்டு முக்கிய கமாண்டர்கள் உயிரிழந்தார்கள் என இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.