தமிழ் இனத்திற்கு எதிரானவனாக தன்னை சித்தரிப்பது வேதனை அளிப்பதாக முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 800 பட விவகார சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள முத்தையா முளிரதரன், இலங்கை தமிழனாக பிறந்தது தனது தவறா என்றும், தான் பேசியது தவறாக திரித்து கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்பாவி மக்களின் படுகொலைகளை தான் எப்போதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆதரிக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.