மொராக்கோவின் அட்லாண்டிக் கடலோர மாகாணமான சஃபியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு 70-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்து இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.