உலகம்

ஜூன் 3-ல் வானத்தில் நடக்கப்போகும் அதிசயம் - வெறும் கண்களில் பார்க்கலாமா..

தந்தி டிவி

வானில் நிகழ உள்ள இந்த அபூர்வ காட்சியை ஜூன் 3ஆம் தேதி கிழக்கு திசையில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் அதிகாலையில் சூரியனுக்கு மேல் பக்கத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன், புதன், செவ்வாய், வருணன், சனி, நெப்டியூன் ஆகிய 6 கோள்களையும் ஒரே வரிசையில் பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் சற்று தூரமாக இருப்பதால், பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர். காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது என கூறுகின்றனர். இதுபோன்ற 5 அல்லது 6 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி, 2025 ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி