உலகம்

மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டி : 'ஹிஜாப்' அணிந்து பங்கேற்கும் இஸ்லாமிய பெண்

மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியில், முதல் முறையாக இஸ்லாமிய பெண் ஒருவர் 'ஹிஜாப்' எனப்படும் முக்காடு அணிந்து பங்கேற்க உள்ளார்.

தந்தி டிவி
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அழகிப் போட்டியில், சாரா இஃப்தேகர் (Sara Iftekhar) என்ற 20 வயது இஸ்லாமிய பெண் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அதில், ஹிஜாப் எனப்படும் முக்காடு அணிந்தபடி பங்கேற்க அவர் முடிவு செய்துள்ளார். அழகி போட்டியின் தகுதி சுற்றுகளில், 'ஹிஜாப்' அணிந்து, ஏற்கெனவே போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் இறுதி போட்டியில் ஹிஜாப்புடன் பெண் ஒருவர் கலந்து கொள்வது இதே முதல்முறை. இது குறித்து பேசிய சட்ட கல்லூரி மாணவியான சாரா, 'எடை, இனம், நிறம், உருவத்திற்கு அப்பாற்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழியில் அழகானவர்கள் தான்' என கூறியுள்ளார்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்