உலகம்

பாங்காக்கில் வெள்ளநீரில் ஜெட் ஸ்கீ ஓட்டிய நபருக்கு சிறை

பாங்காக்கில் வெள்ளநீரில் ஜெட் ஸ்கீ ஓட்டிய நபருக்கு சிறை

thanthitv

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், வெள்ளநீரில் ஜெட் ஸ்கீ ஓட்டி சாகசம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூ பெட்சபுரி சாலையில் ஜெட் ஸ்கீயை வேகமாக இயக்கி, திடீரென திருப்பங்களை மேற்கொண்டதால், வெள்ளநீர் அலைகள் சாலையோர வீடுகள் மற்றும் கட்டிடங்களை நோக்கி மோதின.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், சோர்ன் கெட்சிரி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவருடன் வீடியோ பதிவு செய்த நண்பர் மீதும் வழக்குப்பதிவு செய்து. ஜெட் ஸ்கீயும் பறிமுதல் செய்யப்பட்டது.

சோர்ன் கெட்சிரிக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனையும், 5,000 தாய் பாட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Gold Rate Today | குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம்

TIDCO | CM Vijay | பேரவையில் அறிவித்த CM விஜய்.. வந்தது டெண்டர்

Megamalai issue | பூதாகரமாகும் மேகமலை விவகாரம்..கடையடைப்பு.. பரபரப்பு

CM Vijay Dharapuram Campaign |தாராபுரத்தில் களமிறங்கும் CM விஜய்..பிரம்மாண்டமாக தயாராகும் களம்

Private Bus Strike | தனியார் பேருந்துகள் இயங்காது.. பயணிகள் அதிர்ச்சி