கொரோனா காரணமாக சில நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நாடு திரும்ப உதவுமாறு மலேசியாவை சேர்ந்த 184 பேர் சென்னை விமான நிலையத்தில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மலேசிய அரசு தூதரகம் மூலம் அவர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, சிறப்பு விமானம் மூலம் அவர்கள் மலேசியா அழைத்து செல்லப்பட்டனர்.