உலகம்

இந்தியா-கனடா உறவை அசைத்த ஒற்றை கொலை.. 4வது இந்தியர் கைது.. அதிகரிக்கும் பதற்றம்

தந்தி டிவி

காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் நிஜார் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் 4வது நபரை கனடா போலீசார் கைது செய்தனர். கனடாவின் வான்கூவரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குருத்வாராவின் வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஏற்கனவே 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 4வதாக அமந்தீப் சிங் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹர்தீப் நிஜார் கொலை வழக்கில் இந்தியாவிற்குத் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதற்கான ஆதாரங்களை கனடா காவல்துறை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி