உலகம்

"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.

தந்தி டிவி
காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார். ஐநா பாதுகாப்பு சபை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை என்று குறிப்பிட்டார். இந்தியாவின் நடவடிக்கை எதுவும் இந்தியாவுக்கு வெளியே பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இல்லை என்றும், மனித உரிமைகளை காப்பதில் இந்தியாவுக்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை என்றும் கூறினார். செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் பத்திரிகையாளர்களிடம் சையத் அக்பருதீன் கை குலுக்கி பாராட்டிய நிகழ்வு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்