அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 57 வயதான கமலா ஹாரிஸ் ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட நிலையில், மீண்டும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார். தான் மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்ட கமலா ஹாரிஸ், அனைவரையும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள ஊக்குவிபப்தாகவும், இது முற்றிலும் பாதுகாப்பனது மற்றும் இலவசமானது என்று அவர் தெரிவித்தார். மேலும் கொரோனாவால் இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்லாமல் இறந்தவர்கள் என்று கூறிய அவர், தடுப்பூசி செலுத்தி தொற்று நோயைக் கடக்கலாம் என்று தெரிவித்தார்.