அமெரிக்க அதிபர் ஆனால் எல்லை பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பேன் என தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்தியாவின் 74 வது சுதந்திரதின விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பேசிய ஜோ பைடன் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் பெரிய சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றம், உலக சுகாதார பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்போம் என்றார்.