ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாதுகாப்பு நடவடிக்கையாக சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடிகளில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் உள்ள அனிமேஷன் உருவங்கள் நடைபாதையில் நடந்து செல்வோரை பெரிதும் கவர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இதன் மூலம் விபத்துக்களை தவிர்க்க முடியும் என்று ஒளிரும் மூடிகளை வடிவமைத்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.