ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவின் புத்தாண்டு உரையை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் அரண்மனை நோக்கி படையெடுத்தனர். வயது மூப்பு காரணமாக வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி தனது அரியணையை துறக்க முடிவு செய்துள்ளதார். அவருக்கு பின்னர் அவரது மகன் நருஹிட்டோ மன்னராக பதவியேற்கவுள்ளார். ஜப்பான் வரலாற்றில் 200 ஆண்டுகளில் முதல் முறையாக பதவி விலகும் மன்னரான அகிஹிட்டோவின் கடைசி புத்தாண்டு உரை இது என்பதால், அவரின் ஆதரவாளர்கள் அரண்மனை வாயில் முன் திரண்டனர். மனைவியும் ராணியுமான மிச்சிகோவுடன் மக்களை சந்தித்த அவர், தனது புத்தாண்டு வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்.