ஈரான் தலைநகரான தெஹ்ரான் மீது காலை முதலே இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் தெஹ்ரான் நகரம் முழுவதும் கரும் புகை மூட்டம் சூழ்ந்து காட்சியளித்தது. ஈரானின் ஏவுகணை தளங்கள், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் எரிபொருள் கிடங்குகளை தாக்கியதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், ஈரான் மீது தாக்குதலை இரக்கமின்றி தொடருவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.