இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையேயான மோதல் வலுவடைந்து வருகிறது. இரு தரப்பினரும் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். தாக்குதல் மையமாக மாறி உள்ள காஸாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தொடர் தாக்குதலால் அங்கு பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், குடும்பத்தினரை இழந்து காஸா மக்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். தாக்குதல் சம்பவங்களால், பாலஸ்தீனத்தில் இதுவரை 58 குழந்தைகள் உள்பட 204 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.