உலகம்

Imran Khan | இம்ரான் கான் இருக்கிறாரா? இல்லையா? - வெளியான பரபரப்பு தகவல்

இம்ரான் கான் இருக்கிறாரா? இல்லையா? - வெளியான பரபரப்பு தகவல்

thanthitv

#imrankhan #imrankhanhealth “பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் நலமாக உள்ளார்“ பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சிறை வாழ்க்கையைஆய்வு செய்ய, உச்சநீதிமன்றம் நியமித்த இம்ரான் கானின் பிடிஐ கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சல்மான் சப்தார், ராவல்பிண்டி அடியாலா மத்திய சிறையில் இம்ரான் கானை நேரில் சந்தித்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நீடித்தது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சப்தார், “இம்ரான் கான் நலமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளார்“ என்று தெரிவித்தார். ஆனால், சந்திப்பு தொடர்பான விரிவான தகவல்களை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பின்னரே வெளியிட முடியும் என்றார். இம்ரான் கான் கடந்த 2023 ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சிறையில் உள்ளார். அவருக்கு குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்களைச் சந்திக்கும் உரிமைகள் மீறப்படுவதாக பிடிஐ கட்சி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 12ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்