#iranuswar #mojtabakhamenei ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல் - ஈரான் அறிவிப்பு அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே வளைகுடா பகுதியில் தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் படைகளின் சட்டவிரோத நடமாட்டமே இதற்குக் காரணம் என ஈரான் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையை தொடர்ந்து பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மோதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கும் பரவி, வளைகுடா பிராந்தியத்தில் பெரும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது..