உலகம்

Iran War | அமெரிக்காவுக்குள் ஈரான் ஸ்லீப்பர் செல்கள்? - திடீர் ஜர்க்கில் டிரம்ப்

Iran War | அமெரிக்காவுக்குள் ஈரான் ஸ்லீப்பர் செல்கள்? - திடீர் ஜர்க்கில் டிரம்ப்

thanthitv

அமெரிக்காவுக்குள் ஈரான் ஸ்லீப்பர் செல்கள்? அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானின் ட்ரோன் தயாரிப்பு திறனை இலக்காகக் கொண்டு அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளதாக கூறினார். இதன் விளைவாக, ஈரானில் இருந்து மேற்கொள்ளப்படும் ட்ரோன் ஏவுதல்கள் 83 சதவீதம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி மீது நடந்ததாக கூறப்படும் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த சம்பவம் விசாரணையில் இருப்பதாக டிரம்ப் கூறினார். மேலும், அமெரிக்காவுக்குள் ஈரான் ஸ்லீப்பர் செல்கள் செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு