அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் 230க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலை அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதல்களில் 230க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1,800 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களால் ஈரானின் சுகாதார அமைப்பும் கடுமையாக சேதமடைந்துள்ளது. 50 முதலுதவி மையங்கள், 41 மருத்துவ மையங்கள், 199 சுகாதார நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 38 ஆம்புலன்ஸ்கள் சேதமடைந்ததுடன், 24 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.