#trump #iranwar டிரம்பை ஈரான் கொல்ல முயன்றதாக அமெரிக்கா குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ, ஈரான் கொல்ல முயன்றதாகவும் ஆனால் இறுதியில் அதிபர் டிரம்பிற்கே வெற்றி கிடைத்ததாகவும் அமெரிக்க போர் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். அண்மையில் சர்வதேச நீரில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து இந்திய பெருங்கடலில் நின்ற ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக எதிரி கப்பலை தாக்க நீருக்குள் சென்று கப்பல்களை தாக்கும் ஆயுதமாக அறியப்படும் 'டார்பிடோ' பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.