ஈரானின் டெஹ்ரான் நகரில் இஸ்லாமிய புரட்சியின் 41வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு பேசிய ஈரானிய அதிபர் ரூஹானி, ஈரான் உலகின் மாபெரும் சக்தியாக இருப்பதை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் விரைவில் ஈரானியர்களின் சக்தியை அமெரிக்க தெரிந்துகொள்ளும் என்றும் எச்சரித்தார்.