ஈரான் நாட்டில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த நாடு அறிவித்த பின்னர், மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். விமான விபத்தில் ஈரானியர்கள் உள்பட 176 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று புதிய ராணுவ தளபதி இஸ்மெயில் கானி பதவி விலக வேண்டும் என மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.