ஈரான் தலைநகர் தெஹரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு கூடிய மக்கள், தூதரகத்தை மூட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் இங்கிலாந்து தூதரை அவர்கள் சிறைவைத்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவத்தை இங்கிலாந்து கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்காவுக்கு இங்கிலாந்து ஆதரவு அளித்ததை அடுத்து இந்த போராட்டம் நடைபெற்றது .