ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.. ஈரான் அணு ஆயுதத்தை வெற்றிகரமாகத் தயாரித்திருந்தால், அது ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார் குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளை ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காகவே ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தித் திட்டத்தை பி-2 (B-2) ரக குண்டுவீச்சு விமானங்கள் மூலம் அமெரிக்கா வெற்றிகரமாக அழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.