துபாயில் அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து நடத்தும் பதிலடி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையிக் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் பல இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.. பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் ஏவிய 137 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 209 ட்ரோன்களை ஐக்கிய அரபு அமீரக வான்படை தடுத்து அழித்துள்ளதாகவும், இந்த தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், 58 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.