போர் நிறுத்தம் கேட்கவில்லை என ஈரான் தகவல் அமெரிக்கா கூறியபடி ஈரான் போர் நிறுத்தத்தையோ அல்லது பேச்சுவார்த்தையையோ கோரவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார். மேலும், அமெரிக்காவின் சட்டவிரோத போர் முடியும் வரை தங்களது ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களே ஈரான் தாக்குதலின் இலக்குகள் என்றும் அராக்சி விளக்கம் அளித்தார்.