Iran Israel Attack | தொடரும் ஈரான் - இஸ்ரேல் மோதல்.. உலகத்திற்கே பேரதிர்ச்சி கொடுத்த கத்தாரின் முடிவு ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல், மூன்றாவது நாளை கடந்தும் நீடிக்கும் நிலையில், இப்போது உலக எரிசக்தி சந்தையையும் நேரடியாக பாதிக்க ஆரம்பித்துள்ளது. கத்தாரில் இரண்டு முக்கிய இடங்களான ராஸ் லஃபான் மற்றும் தெற்கு மெசையீத் மீது ஈரான் ட்ரோன்கள் தாக்கியதால், திரவ இயற்கை எரிவாயு நிறுவனமான 'கத்தார் எனர்ஜி' தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் , சவுதி அரேபியாவின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பாடும், ஈராக் குர்திஸ்தான் எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசியா மற்றும் ஐரோப்பா சந்தைகளுக்கான எரிசக்தி விநியோகம் மற்றும் ஏற்றுமதிகள் தற்காலிக தடையை சந்தித்துள்ளன.