இஸ்ரேலால் திணிக்கப்பட்ட 12 நாள் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் (Masoud Pezeshkian) அறிவித்துள்ளார். ஈரானின் வீரமிக்க எதிர்ப்புக்குப் பிறகு, போரை முடிவுக்கு கொண்டு வந்து வரலாற்றை உருவாக்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயத்துடன் (Mohammed bin Zayed) தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஈரான் அதிபர் விளக்கம் அளித்தார். அப்போது, தற்காத்துக்கொள்ள ராணுவ மோதலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டதாகவும், இதுபோன்ற கட்டாயம் வராது என்றும், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.