கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை ஊக்குவிக்க, பிலிப்பைன்ஸ் கிராமம் ஒன்றில் 25 கிலோ அரிசி பரிசாக வழங்கப்படுகிறது. அது பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவிற்கு அருகே உள்ள சுகட் என்ற கிராமத்தில், கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள ஏழை விவசாயிகள் தயக்கம் காட்டியதை அரசு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
ஆனால் அந்த பகுதியை சேர்ந்த பணக்காரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுகட் கிராமம், குலுக்கல் முறை, கொரோனா தடுப்பூசிகள், ஜெரமல் மென்டோசா
ஏழை விவசாயிகளை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்க, குலுக்கல் முறையில் வாரம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் 20 நபர்களுக்கு 25 கிலோ அரிசி மூட்டை ஒன்று பரிசாக அளிக்கும் திட்டத்தை சுகட் கிராமப் பஞ்சாயத்து அதிகாரிகள் செயல்படுத்தியுள்ளனர்.
இந்த திட்டம் பெரிதும் பயனளிப்பதாகவும், தற்போது தினமும் 2,000 பேர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதாகவும், அதிகாரிகள் கூறுகின்றனர்.
குலுக்கல் முறையில் 25 கிலோ அரிசி மூட்டையை வென்ற லுயில்ன் டியுபைஸ், இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து,
தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு கிடைத்த பரிசு என அரிசி மூட்டையை வென்றவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.