உலகம்

பெப்ஸி சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து விலகுகிறார் இந்திரா நூயி

பெப்ஸி கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சென்னையை சேர்ந்த இந்திரா நூயி, அப்பொறுப்பில் இருந்து விலக இருக்கிறார்.

தந்தி டிவி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனம் பெப்ஸிகோ. இந்த நிறுவனத்தில், இந்திரா நூயி 24 ஆண்டுகளாக பணியாற்றினார். இதில் கடந்த 12 ஆண்டுகளாக சி.இ.ஓ.எனப்படும் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்த அவர், அப்பொறுப்பில் இருந்து தற்போது விலகுகிறார்.அவருக்கு பதிலாக, தற்போது அந்நிறுவனத்தின் தலைவராக உள்ள ரமோன் லகுவார்ட், சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார்.நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.புதிய சி.இ.ஓ., அக்டோபர் 3ஆம் தேதி பொறுப்பு ஏற்கிறார். அதேநேரம் இந்திரா நூயி, அந்நிறுவனத்தின் தலைவராக வரும் 2019ஆம் ஆண்டு வரை இருப்பார் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, டுவிட்டரில் பதிவிட்டுள்ள இந்திரா நூயி,நிறுவனத்துக்கான தனது பணிகளை எண்ணி பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.

CM Stalin Letter | ``உடனே..’’ - முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ADMK | Kaliyammal | Edappadai Palanisamy | ஈபிஎஸ் இல்லத்தில் காளியம்மாள்.. இணைகிறார்..

LPG Cylinder Price Hike | Hotels | ``சிலிண்டர் விலை ரூ.5000’’ - மக்கள் தலையில் இடியாய் இறங்கும் பில்

Petrol Sales | ஒரே நாளில் இத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையா?

Breaking | Sasikala | New Party | புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் ச‌சிகலா