குண்டுவெடிப்பு குறித்து முன்கூட்டியே இந்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்த போதும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழும்புவில் நடைபெற்ற மே தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தமது இயலாமையை மறைக்க பிறர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான வழிகளை இலங்கை அரசு தேடுவதாகவும் குற்றம்சாட்டினார்.