உலகம்

இந்தியாவின் எதிர்மறையான அணுகுமுறை வருத்தம் அளிக்கிறது - இம்ரான் கான்

இந்தியாவின் எதிர்மறையான அணுகுமுறை வருத்தமளிப்பதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டு கொண்டதன் பேரில், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபெற இருந்தது. இந்நிலையில், காஷ்மீரில் நேற்று முன் தினம் மூன்று போலீசார் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

* இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இந்திய அரசு, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது. இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பேச்சுவார்த்தை தொடர்பான இந்தியாவின் எதிர்மறையான அணுகுமுறை வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பெரிய பதவிக்கு தகுதி இல்லாதவர்கள் பொறுப்பில் இருப்பதை தாம் சிறு வயது முதல் பார்த்து வருவதாகவும் தனது அதிருப்தியை அவர், வெளிப்படுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்