உலகம்

பிரிட்டன் முதல் ஸ்வீடன்... "இந்த ஒற்றை ஆவணமே போதும்.." இந்தியர்களுக்கு அடித்தது மெகா லக்..!

தந்தி டிவி
• இந்திய ஓட்டுனர் உரிமத்துக்கு, 8 உலக நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அது குறித்த விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். • பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின், சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் • ஸ்வீடன் ஆகிய எட்டு நாடுகளில் இந்திய ஓட்டுநர் உரிமம் • அங்கீகரிக்கப்பட்டுள்ளது. • இந்தியாவில் வாகனங்களை சாலையின் இடதுபக்கம் ஓட்டும் முறை அமலில் உள்ளது. கார்கள் மற்றும் இதர வாகனங்களின் ஸ்டியரிங், வலது பக்கம் அமைக்கப்பட்டிருக்கும். • இந்திய ஓட்டுநர் உரிமத்தை அங்கீகரிக்கும் பெரும்பாலான • நாடுகளில், இதே போல் சாலையின் இடது பக்கம் • வாகனங்களை ஓட்டும் முறை உள்ளது குறிப்பிடத்தக்கது. • பெரும்பாலும் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளில் வாகனங்களை இடதுபுறம் செலுத்தும் முறை அமலில் இருந்து வருகிறது. • அதே சமயம் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற வட அமெரிக்க நாடுகளில் வலதுபுறம் வாகனம் ஓட்டும் முறை உள்ளது. • உலக அளவில் 75 நாடுகளில் வாகானங்களை இடதுபுறம் இயக்கும் முறையும், 165 நாடுகளில் வலதுபுறம் இயக்கும் முறையும் நடைமுறையில் உள்ளது. • ஆனால், பிரிட்டீஸ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இல்லாத ஜப்பான், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட சில இதர நாடுகளிலும் வாகனங்களை இடதுபுறம் இயக்கும் முறை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி