உலகம்

வானிலே பறிபோன கணவன் உயிர்... துபாயில் சிக்கிய மனைவி... பெண்ணின் கண்ணீர் ட்வீட் - உடனே வந்த பதில்

தந்தி டிவி

தொழில் முனைவராக இருக்கும் வித்யா மாதவன் என்ற பெண்மணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் தனது மாமா காலமானதாகவும், துபாயில் உள்ள தனது அத்தை அங்கிருந்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கே சிக்கித் தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மாமாவின் உடலை விரைவில் திருவனந்தபுரத்திற்குச் எடுத்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உதவிகள் தேவை எனவும் கூறி, மத்திய வெளி விவகார அமைச்சகத்தை டேக் செய்து வித்யா மாதவன் பதிவிட்டுள்ளார்.

அவரது கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள துபாயில் உள்ள இந்திய தூதரகம், அவரது மாமா குடும்பத்தினருடனும், உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் உள்ளதாகவும், உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து ஆவணங்கள் கிடைத்தவுடன், சடலத்தை எடுத்துச் செல்லும் பணியை துரிதப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்