உலகம்

குல்பூஷண் ஜாதவை சந்திக்க பாகிஸ்தான் அனுமதி

குல்பூஷன் ஜாதவை இன்று இந்திய துணை தூதர் சந்தித்து பேசுகிறார்.

தந்தி டிவி
பாகிஸ்தான் சிறையில் உள்ள ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை சந்திக்க தூதரக வாய்ப்பு அளிக்கப்பட்ட உள்ளதாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி நேற்றிரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை அந்த அனுமதியை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு, இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியா சென்றுள்ளார். அங்கு நடைபெறும் ஆலோசனைக்கு பின்னர் குல்பூசன் ஜாதவை சந்திக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடங்கும் என கூறப்படுகிறது. சர்வதேச நீதிமன்ற உத்தரவுப்படி வெளிப்படையான, அர்த்தமுள்ள சந்திப்பாக இது அமையும் என இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்