உலகம்

சீனாவில் மீண்டும்..மீண்டும்..ஜின்பிங்...பக்காவாக ஸ்கெட்ச் போட்ட ஜி ஜின்பிங்

தந்தி டிவி

சீனாவில் மீண்டும்..மீண்டும்..ஜின்பிங்...பக்காவாக ஸ்கெட்ச் போட்ட ஜி ஜின்பிங்

இன்று நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், ஜி ஜின்பிங்-ஐ 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுத்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு இன்று துவங்கியது.

ஒரு வார காலம் நடைபெறும் இந்த மாநாட்டில் 2 முறை அதிபராகப் பதவி வகித்து வரும் ஜி ஜின்பிங் தொடர்ந்து 3வது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

69 வயதான ஜின்பிங்கைத் தவிர சீனத் தலைமைப் படிநிலையில் இரண்டாம் நிலைத் தலைவர் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் மாற்றியமைக்கப்பட உள்ளனர்.

ஜி அமைத்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் 2 ஆயிரத்து 296 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தலைமை மாறுதல், நாடாளுமன்ற நடவடிக்கை உலகத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

ஜி அதிகாரத்தில் தொடர்வதற்கு வசதியாக, ஒரு அதிபர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க வேண்டும் என்ற விதிமுறை சீன அரசியலமைப்பில் இருந்து மாற்றியமைக்கப்பட்டது.

இன்று துவங்கிய தேசிய மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அக்கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், மாவோ சேதுங்கிற்குப் பிறகு ஜின்பிங் ஒரு சக்திவாய்ந்த தலைவராக உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு