உலகம்

இந்தியா, பாக். இடையே அணுஆயுதப் போர் நடந்தால்...? - "12.5 கோடி பேர் உடனடியாக உயிரிழப்பார்கள் "

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் நடந்தால் 12 கோடி பேர் உடனடியாக உயிர் இழப்பார்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தந்தி டிவி

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் நடந்தால் 12 கோடி பேர் உடனடியாக உயிர் இழப்பார்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது உலகில் 9 நாடுகளிடம் அணுஆயுதங்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானும், இந்தியாவும் அதிகஅளவில் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாடுகளிடமும் 150 அணுஆயுதங்கள் தற்போது உள்ளதாக கூறப்படும் நிலை​யில், வரும் 2025-ஆம் ஆண்டில் இது 500 ஆக உயரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். காஷ்மீருக்காக பலமுறை இரண்டு நாடுகளும் போர் நடத்தி உள்ளன என்றும், மீண்டும் போர் ஏற்பட்டால் அது, உலக நாடுகளின் இறப்பு விகிதத்தை 2 மடங்காக அதிகரிக்கும் என கொலரடா பல்கலைக்கழக பேராசிரியர் பிரெய்ன் டூன் எச்சரித்துள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே