கொலம்பியாவில் சட்ட விரோதமாக கடத்த முயன்ற 1.8 டன் அளவுடைய போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தெற்கு பசிபிக்கில், நீர் மூழ்கிக் கப்பலைப் போன்ற தோற்றமுடைய கப்பலில் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இந்திய மதிப்பில், 438 கோடியே 35 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய். கடந்த மாதம் மட்டும் கொலம்பிய அதிகாரிகள், ஆயிரத்து 459 கோடியே 74 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, சுமார் 6 டன் எடையுள்ள போதைப்பொருட்களைக் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.