கொழும்புவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிபர் சிறிசேனா, ரனில் விக்ரமசிங்கை
மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். தமக்கு ரனில் மீது தனிப்பட்ட கோபம் இல்லை என்றும், அவர் இலங்கைக்கு பொருத்தமானவர் அல்ல என்றும் சிறிசேனா தெரிவித்துள்ளார். தாங்கள் அரசியலமைப்பின்படியே நடப்பதாகவும், ரனில் பதவிக்காக தூதரகங்களை நாடி நிற்பதாகவும் சிறிசேனா தெரிவித்தார், இலங்கையில் அரசியல் நெருக்கடி இன்னும் 7 நாளில் முடியும் என்றும், தாம் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறிசேனா கூறினார்.