உலகம்

இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையுடன் ஹஜ் நடைபெறும் - சவுதி அரேபியா அரசு அறிவிப்பு

இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையுடன் ஹஜ் நடைபெறும் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையுடன் ஹஜ் நடைபெறும் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள், மெக்காவில் வந்து ஹஜ் செய்ய தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது. ஹஜ் பயணத்தின் போது, வயதானவர்களுக்கு தடை மற்றும் கூடுதல் சுகாதார சோதனைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறி உள்ளது. சவுதி அரேபியாவில் மட்டுமே வசிப்பவர்கள், ஹஜ் செய்ய தயாராக உள்ளதாகவும் அந்நாட்டு அரசு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலால் இது வரை ஆயிரத்து 307 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்