உலகம்

உலகின் நீளமான தலைமுடி : கின்னஸ் சாதனை செய்த குஜராத் பெண்

உலகிலேயே நீளமான தலைமுடி வளர்த்து குஜராத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண் நிலான்ஷி படேல் கின்னஸ் சாதனை செய்துள்ளார்.

தந்தி டிவி

தற்போது பிளஸ்-1 படித்து வரும் இவர், சிறுவயதில் இருந்தே தனது தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் ஆர்வமுடன் இருந்துள்ளார். தலைமுடியை நீளமாக வளர்ப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும், இதற்கு தனது பெற்றோரும் , சகோதரரும் உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது 170 செண்டி மீட்டர் நீளமாக இவரது தலைமுடி வளர்ந்து இருப்பதால் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதுடன், அதற்கான சான்றி​ழையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஏபிரில் என்ற பெண் 152 புள்ளி 5 சென்டி மீட்டர் தலைமுடி வளர்த்து சாதனை செய்ததும், அதன்பின்னர் கெயிட்டோ என்ற பெண் 155 புள்ளி 5 சென்டி மீட்டர் தலைமுடி வளர்த்ததுமே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த 2 சாதனைகளையும் நிலான்ஷி படேல் முறியடித்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு