போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் செல்ல முயன்ற தொண்டு நிறுவனத்தின் படகை இஸ்ரேல் படையினர் தடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவத் தாக்குதலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பிரபல சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் Greta Thunberg உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர், படகில் நிவாரணப் பொருட்களுடன் நுழைய முயன்ற நிலையில் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உதவிப்பொருட்களுடன் வந்த தொண்டு நிறுவன படகை இஸ்ரேலியப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இஸ்ரேலில் உள்ள துறைமுகத்திற்கு படகு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.