கொரோனா நிவாரணமாக இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் வழங்குவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவில் நிலவி வரும் மோசமான சூழலை பார்த்து பேரதிர்ச்சி அடைந்துள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கிடைக்க கூகுள் ஊழியர்கள் உதவியுடன் UNICEF அமைப்புக்கு 20 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ள சுந்தர் பிச்சை, கொரோனா பற்றிய முக்கிய தகவல்களை மக்களிடம் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.