உலகம்

தேர்தலில் திடீர் ட்விஸ்ட்... மண்ணை கவ்விய துணை அதிபர் - Ex. அதிபர் வெற்றி | Ghana

தந்தி டிவி

கானா நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ஜான் டிராமணி மகாமா வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாமாவின் முக்கிய போட்டியாளரும், துணை அதிபரும், ஆளும் கட்சியின் அதிபர் வேட்பாளருமான மஹமுது பவுமியா, தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். மொத்தமுள்ள 276 தொகுதிகளில், 267 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றதாகவும், அதில், 60.9 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதில், முன்னாள் அதிபரும், பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான ஜான் டிராமானி மகாமா 56.55% வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது 66 வயதாகும் மகாமா, கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016 வரை அதிபராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்