உலகம்

Gaza Teacher | அணு குண்டாலேயே அழிக்க முடியாத செல்வத்தை உருவாக்கும் காசாவின் ஹதீல் ஜமால்

அணு குண்டாலேயே அழிக்க முடியாத செல்வத்தை உருவாக்கும் காசாவின் ஹதீல் ஜமால்

thanthitv

Gaza Teacher | அணு குண்டாலேயே அழிக்க முடியாத செல்வத்தை உருவாக்கும் காசாவின் கணித ஆசிரியை #gaza #teacher #freeeducationcentre காசா குழந்தைகளுக்காக இலவச கல்வி மையம்-நெகிழ வைக்கும் ஆசிரியர் எகிப்தின் அரீஷ் நகரில், காசாவில் இருந்து இடம்பெயர்ந்த குழந்தைகளுக்காக இலவச கல்வி மையத்தைத் தொடங்கி நெகிழ வைத்துள்ளார் காசா ஆசிரியர் ஹதீல் ஜமால் ஸோரோப்... ப்ரீத்... 36 வயதான கணித ஆசிரியையான ஹதீல் ஜமால், 2024 ஏப்ரல் 23ம் தேதி போர் காரணமாக சேதமடைந்த வீட்டை விட்டு குடும்பத்துடன் ரஃபா எல்லை வழியாக எகிப்து வந்தார். தனது குழந்தைகள் கல்வியில் பின்தங்கக்கூடாது என்ற கவலையால் வீட்டிலேயே அவர் பாடம் நடத்தத் தொடங்கினார். பின்னர் பிற பாலஸ்தீன குடும்பங்களின் குழந்தைகளுக்கும் இலவசமாக கல்வி கற்றுத்தர துவங்கினார்... மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து தற்போது 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கணிதம், அறிவியல், அரபு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு வகுப்பெடுத்து வருகிறார்... காசாவின் கல்வி அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது குழந்தைகள் பாதுகாப்பாக கல்வி கற்கும் நாள் வந்தால் மட்டுமே காசாவுக்கு திரும்புவேன் என ஹதீல் உறுதியாக கூறுகிறார்...

BREAKING || தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு - திடீர் பரபரப்பில் அரசியல் களம்

Breaking | Vijay | TVK | வேலூரில் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு - வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING | TVK | TN Politics | Vijay | "இன்று இரவு..." தவெக-வின் திடீர் அறிவிப்பு

Breaking | Epstein files | Prince Andrew | எப்ஸ்டீன் பைல்ஸ்.. பிரிட்டன் இளவரசர் அதிரடி கைது